அரசியல் இலங்கை செய்தி

18 ஆம் திகதி விசேட நாடாளுமன்ற அமர்வு: வெளியானது அறிவிப்பு!

  • December 13, 2025
  • 0 Comments

விசேட நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிரதமரின் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 16 இன் பிரகாரமே விசேட அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் இந்த விசேட அமர்வானது சபாநாயகரால் 2025.12.12 ஆம் திகதி பிரசுரிக்கப்பட்ட 2466/33ஆம் இலக்க விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 18 ஆம் திகதி 9.30 மணிக்கு கூடவிருப்பதுடன், இதில் கலந்துகொள்ளுமாறு அனைத்து எம்.பிக்களுக்கும் சபாநாயகர் அறிவுறுத்தியுள்ளார். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குரிய நிதியை […]

உலகம் செய்தி

புளோரிடாவில் அதிக்கூடிய வெப்பநிலையில் காரில் சிக்கிக்கொண்ட 16 மாதக் குழந்தை!

  • December 13, 2025
  • 0 Comments

புளோரிடாவில் (Florida)  18 மாதக் குழந்தையொன்று நேற்று காரில் சிக்கிக்கொண்ட நிலையில் காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். காரின் வெப்பநிலை 29C (85F) எட்டிய நிலையில், குழந்தை சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து குழந்தையின் தாயார் 999 என்ற அவசர எண்ணிற்கு அழைத்து உதவிக் கோரிய நிலையில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து குழந்தையை மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தின் சாவியை தற்செயலாக உள்ளே விட்டுச் சென்றமையால் இந்நிலை ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் இந்த சம்பவத்தை […]

இலங்கை

‘டிட்வா’ சூறாவளி ஏற்பட முன்னர் 25 முறை இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது

  • December 13, 2025
  • 0 Comments

நவம்பர் 23ஆம் திகதிக்கு முன்னர் 25 சந்தர்ப்பங்களில் ‘டிட்வா’ சூறாவளி குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வளிமண்டலவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வளிமண்டலவியலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த தகவலை கூறியுள்ளது. ‘டிட்வா’ சூறாவளி குறித்த முன்கூட்டிய அறிவிப்புகளை வெளியிடுவது தொடர்பாக கடந்த சில நாட்களாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் மீது பல்வேறு தரப்பினரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இலங்கை வளிமண்டலவியலாளர்கள் சங்கம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள அனர்த்த சூழ்நிலையில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் செயல்பாடு […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

மனிதனின் தூண்டுதல்களே ஆசிய நாடுகளில் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுக்கு காரணம்!

  • December 13, 2025
  • 0 Comments

மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றமே ஆசிய நாடுகளில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம் மற்றும் மண்சரிவுக்கு மூலக்காரணம் என்று பகுப்பாய்வு ஒன்று தெரிவித்துள்ளது. உலக வானிலை பண்புக்கூறு நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வின்படி, வட இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட அதியுயர் வெப்பம் சூறாவளிகளுக்கு ஆற்றலைச் சேர்த்ததாக குறிப்பிட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட புயல், கடுமையான மழை, மண்சரிவு, வெள்ளம் ஆகியவை காரணமாக 1600இற்கும் மேற்பட்டோர் பலியாகியதாகவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. WWA ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, வட இந்தியப் பெருங்கடலில் கடல் […]

இலங்கை

இலங்கையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் 410 வைத்தியசாலைகள் பாதிப்பு

  • December 13, 2025
  • 0 Comments

டிட்வா சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையால் இலங்கையில் 410 வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் அதிகபட்ச சேதங்கள் மஹியங்கனை ஆதார வைத்தியசாலை மற்றும் சிலாபம் மாவட்ட வைத்தியசாலைக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் கூறியுள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க, நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக 500க்கும் மேற்பட்ட சுகாதார நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட சுகாதார நிறுவனங்களை மீண்டும் வழமைக்குக் கொண்டுவர மேலும் கால அவகாசம் எடுக்கும் எனக் கூறியுள்ளார். […]

அரசியல் இலங்கை செய்தி

மீண்டும் தாய் வீடு திரும்பும் மைத்திரி?

  • December 13, 2025
  • 0 Comments

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒன்றிணைவது மிகவும் நல்லது என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன பக்கம் இருந்த விஜயதாச ராஜபக்ச சுதந்திரக் கட்சியில் இணைந்துள்ளமை தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறினார். “ கட்சி தொடர்பில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை மீளப்பெற்று இணைவது நல்லது. எனக்கு எதிராகவும் வழக்குகள் உள்ளன. அவை முடிவடைந்த பின்னரே நான் முடிவொன்றை எடுப்பேன். விஜயதாச ராஜபக்ச எனக்கு அறிவித்துவிட்டே சென்றார். […]

உலகம்

காசாவை தாக்கிய புயல் – 800,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!

  • December 13, 2025
  • 0 Comments

காசாவை தாக்கிய பைரன் புயல் காரணமாக ஏறக்குறைய 800,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முகாம்களில் வசிக்கும் காசா மக்கள் கனமழை காரணமாக கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மோதல்களால் இடம்பெயர்ந்த குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக முகாம்களில் வசித்து வருகின்ற நிலையில் இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். குளிர் மற்றும் மழை காலநிலை காரணமாக முகாம்களில் உள்ள குழந்தைகள் குறிப்பாக சிரமப்படுவதாகவும், கழிவு […]

இந்தியா

மெஸ்ஸியின் வருகையால் விழாக்கோலம் பூண்ட கொல்கத்தா நகரம் – உச்சக்கட்ட பாதுகாப்பு!

  • December 13, 2025
  • 0 Comments

அர்ஜென்டினா கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி இன்று (13) காலை கொல்கத்தா வந்து சேர்ந்தார். மெஸ்ஸியை வரவேற்க கொல்கத்தா விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கூடியிருந்தனர். அவர் தங்கியுள்ள கொல்கத்தாவில் உள்ள ஹோட்டலின் முன்பும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக கொல்கத்தாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். மேலும் அவரது இந்திய சுற்றுப்பயணத்திற்கு ‘GOAT India Tour 2025’ என்று […]

அரசியல் இலங்கை செய்தி

இலங்கை மீண்டெழ ஆஸ்திரேலியா துணை நிற்கும்: பிரதமரிடம் உறுதியளிப்பு!

  • December 13, 2025
  • 0 Comments

பேரிடரால் ஏற்பட்ட நெருக்கடியான நிலையில் இருந்து இலங்கை மீண்டெழுவதற்கு ஆஸ்திரேலியா துணை நிற்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் குடியுரிமை, ஒழுக்கநெறி மற்றும் பல்கலாசார அலுவல்கள் மற்றும் சர்வதேச கல்விக்கான துணை அமைச்சர் ஜூலியன் ஹில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அவர் பிரதமர் கலாநிதி ஹரினி ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்படி உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையை பாதித்த திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர், மனிதாபிமான உதவி மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக ஆஸ்திரேலியா வழங்கிய […]

உலகம் செய்தி

தாய்லாந்து, கம்போடியாவில் அமைதி திரும்பும் – நம்பிக்கையில் ட்ரம்ப்!

  • December 13, 2025
  • 0 Comments

தாய்லாந்து மற்றும் கம்போடியா பிரதமர்கள் சண்டையை நிறுத்துவார்கள் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்  தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியல் மீடியாவில் அவர் இட்டுள்ள பதவில்,  இரு தலைவர்களும் “இன்று மாலையில் அனைத்து துப்பாக்கிச் சூடுகளையும் நிறுத்தவும், என்னுடன் செய்து கொண்ட அசல் அமைதி ஒப்பந்தத்திற்குத் திரும்பவும் ஒப்புக்கொண்டுள்ளனர்” என்று கூறியுள்ளார். எல்லையில் நடந்த பதற்றம் காரணமாக சமீககாலத்தில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சமீபத்திய மோதல் தொடர்பில் இருநாட்டு தலைவர்களுடனும் […]

error: Content is protected !!