செய்தி

உலக வங்கியின் மதிப்பீட்டு அறிக்கை வெளியான பின்பு சர்வதேச கொடையாளர் மாநாடு!

  • December 15, 2025
  • 0 Comments

சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துவருகின்றதென அறியமுடிகின்றது. பேரிடர் மீள்கட்டுமானப் பணிகள் மற்றும் மீண்டெழுதல் உள்ளிட்ட விடயங்களுக்காகவே இம்மாநாடு நடத்தப்படவுள்ளது. பேரிடரால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அவற்றை மீளமைக்க ஏற்படும் செலவுகள் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. உலக வங்கி இதற்குரிய ஏற்பாட்டை செய்துவரும் நிலையில், அது தொடர்பான ஆரம்பக்கட்ட அறிக்கையில் விரைவில் வெளியிடவுள்ளது. இந்த மதிப்பீடுகள் நிறைவடைந்த பின்னர், சர்வதேச நாடுகள் பங்கேற்கும் கொடையாளர் மாநாடு நடத்தப்படும் என தெரியவருகின்றது. சர்வதேச கொடையாளர் மாநாட்டை […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் குளிரான வானிலை – விமான சேவைகள் பாதிப்பு!

  • December 15, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் குளிர்கால வானிலை காரணமாக முக்கிய விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்திற்கு நேற்றில் இருந்து இடையூறுகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நியூயார்க்கின் முக்கிய விமான நிலையங்களிலும், பிலடெல்பியா (Philadelphia) சர்வதேச விமான நிலையத்திலும் தரைவழி நிறுத்தங்கள் செயல்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. JFKவிற்கு வருகை தந்த 1000இற்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதங்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. அதேபோல் பிலடெல்பியா சர்வதேச விமான நிலையம் 700க்கும் மேற்பட்ட விமான தாமதங்களை சந்தித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நியூவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையமும் கணிசமான தரைவழி […]

இலங்கை செய்தி

183 பேரை காணவில்லை: 6,176 வீடுகள் முழுமையாக சேதம்!

  • December 15, 2025
  • 0 Comments

டித்வா புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (15) காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 183 பேரை காணவில்லை என பட்டியலிடப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 176 வீடுகள் முழமையாகவும், 95 ஆயிரத்து 213 வீடுகள் பகுதியளவும் சேதம் அடைந்துள்ளன என்று மேற்படி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில் தொடர்ந்து […]

ஆஸ்திரேலியா செய்தி

சிட்னி பயங்கரவாத தாக்குதல்: விசாரணைக்கு FBI யும் ஒத்துழைப்பு!

  • December 15, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியா, சிட்னி போண்டி கடற்கரையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன. இது தொடர்பில் ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டுவருவதாக அமெரிக்கா எப்.பி.ஐ. இயக்குநர் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவால் கோரப்பட்ட உதவிகளை வழங்குவோம். எங்களால் முடிந்தவரை கூடுதல் தகவல்களை வழங்குவதற்கு முயற்சிப்போம் எனவும் அவர் கூறினார். அதேவேளை, மேற்படி தாக்குதல் சம்பவத்தை அடுத்து இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சரை, ஆஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் தொடர்பு கொண்டு விளக்கியுள்ளார். மேலும் சீனா மற்றும் ஜப்பானுக்கான தனது பயணத்தையும் […]

உலகம் செய்தி

குவாத்தமாலாவில் (Guatemala) அவசரகால நிலை பிரகடனம்!

  • December 15, 2025
  • 0 Comments

குவாத்தமாலாவில் (Guatemala) உள்ள இரண்டு நகராட்சிகளில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி அந்நாட்டு ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ (Bernardo Arévalo) நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். சோலோலா (Solola) துறையிலுள்ள நஹுவாலா (Nahuala) மற்றும் சாண்டா கேடரினா (Santa Catarina)  இக்ஸ்டாஹுகான்  (Ixtahuacan) ஆகிய நகராட்சிகளில் இந்த அவசரகாலநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஆயுதமேந்திய நபர்கள்  ஒரு இராணுவச் சாவடியையும் ஒரு காவல் நிலையத்தையும் தாக்கி, சாலைகளைத் துண்டித்து, பேருந்துகளைக் கடத்திச் சென்றதன் விளைவாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றவியல் கும்பல்கள் […]

இலங்கை

மீளவும் திறக்கப்படும் பாடசாலைகள் – சீருடைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

  • December 15, 2025
  • 0 Comments

டித்வா பேரிடரை தொடர்ந்து நாளைய தினம் மீளவும் பாடசாலைகளை திறக்க கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான ஆயத்தப்பணிகளை இன்று மேற்கொள்ள அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்ட 147 பாடசாலைகளை தவிற ஏனைய பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்களுக்கும், கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கும் பாடசாலை சீருடைகள் தொடர்பாக தளர்வான கொள்கையை செயற்படுத்தவும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.  

கருத்து & பகுப்பாய்வு செய்தி

கொவிட் – 19 தடுப்பூசியால் ஏற்படும் மரணங்கள் – ஆய்வில் கண்டறியப்பட்ட உண்மை!

  • December 15, 2025
  • 0 Comments

COVID-19 தடுப்பூசியால் இளைஞர்கள் மத்தியில் எவ்வித திடீர் மரணமும் ஏற்படவில்லை என்பதை புதிய ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த தடுப்பூசிகள் முற்றிலும் பாதுகாப்பானது எனவும் குறித்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ்  நடத்திய ஒரு வருட கால பிரேத பரிசோதனை அடிப்படையிலான ஆய்வில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மூன்றாம் நிலை பராமரிப்பு மையத்தில் ஒரு வருட கண்காணிப்பு ஆய்வு’ என்ற தலைப்பிலான இந்த ஆய்வு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் […]

உலகம் செய்தி

மொரோக்கோவின் எல்லைக்கு அருகே புலம்பெயர்ந்தோரின் சடலங்கள் மீட்பு!

  • December 15, 2025
  • 0 Comments

மொரோக்கோவின் (Morocco) அல்ஜீரியா (Algeria) எல்லைக்கு அருகே 09 ஆப்பிரிக்க புலம் பெயர்ந்தோர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உறைபனியின் தாக்கத்தால் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குளிர்காலத்தில் ஏற்படும் கடுமையான வெப்பநிலைக்கு பெயர் பெற்ற மொராக்கோவின் தொலைதூர மலைப்பாங்கான பகுதியான ராஸ் அஸ்ஃபோரில் (Ras Asfour) 07 ஆண்கள் மற்றும் 02 பெண்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இறந்த நபர்கள் பற்றிய கேள்விகளுக்கு மொரோக்கோவின் உள்துறை அமைச்சகம் உடனடியாக […]

இலங்கை

மலையக சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஜனாதிபதிக்கு அழைப்பு!

  • December 15, 2025
  • 0 Comments

மலையக சமூகம் எதிர்கொள்ளும் பேரிடர் குறித்து விவாதிக்க ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அழைப்பு விடுத்து தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (TPA) தலைவர்  மனோ கணேசன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில், “உங்களுக்குத் தெரியும், மலையக மக்கள், குறிப்பாக கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், சமீபத்திய டித்வா பேரழிவால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நில உரிமை, வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் ஒப்பீட்டளவில் குறைவாகவும், சில […]

ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பாலஸ்தீனத்தை அங்கீகரித்ததன் விளைவே இது: ஆஸ்திரேலியாமீது இஸ்ரேல் கடும் விமர்சனம்!

  • December 15, 2025
  • 0 Comments

யூத எதிர்ப்பு தாக்குதலை ஊக்குவிக்கும் வகையில் ஆஸ்திரேலியா அரசாங்கம் செயல்பட்டுள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளார். பாலஸ்தீன அரசை அங்கீகரித்ததன்மூலம் ஆஸ்திரேலிய தலைமைத்துவம் இதனை செய்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸை பலவீனமான தலைமைத்துவம் எனவும் அவர் விமர்சித்துள்ளார். யூத எதிர்ப்பு புற்றுநோய் போன்றது. தலைவர்கள் அமைதியாக இருக்கும்பட்சத்தில் அது வேகமாக பரவுகின்றது. புற்றுநோய் பரவ ஆஸ்திரேலிய தலைமைத்துவம் இடமளித்தது. அதனால்தான் யூதர்கள்மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனவும் […]

error: Content is protected !!