FIFA மாநாடு: இஸ்ரேலுடன் மேடையேற பாலஸ்தீனம் மறுப்பு!
தாய்லாந்தில் நடைபெற்ற FIFA கால்பந்து மாநாட்டில், பாலஸ்தீன கால்பந்து சங்கத்தின் தலைவர் Jibril Rajoub இஸ்ரேலிய பிரதிநிதியுடன் மேடையைப் பகிர்ந்து கொள்ள மறுத்துள்ளார்.
இஸ்ரேலிய கால்பந்து சங்கத்தின் துணைத் தலைவருடன் இணைந்து நிற்குமாறு FIF தலைவர் வேண்டுகோள் விடுத்தபோதே அவர் இவ்வாறு மறுப்பு தெரிவித்தார்.
இஸ்ரேலின் செயல்களை மறைக்க இவ்வாறான மேடையை பயன்படுத்தக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்களது மக்கள் அனுபவிக்கும் துயரங்களுக்கு மத்தியில் இஸ்ரேலியப் பிரதிநிதிகளுடன் கைகுலுக்க முடியாது என பாலஸ்தீன தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு சர்வதேச விளையாட்டு அரங்கின் கவனத்தை ஈர்த்துள்ளது.





