பொழுதுபோக்கு

கூலி படத்தில் தலைவர் பெயர் என்ன தெரியுமா.? வெறித்தனமா போஸ்டர்

சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகும் கூலி படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் அவருடைய ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் இயக்கும் இப்படத்தின் நடிகர்கள் பற்றிய விவரம் போஸ்டர் உடன் வெளியாகி கொண்டிருக்கிறது.

தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் கதாபாத்திர பெயர் என்னவாக இருக்கும் என கேள்வி கேட்டு தயாரிப்பு தரப்பு ஒரு ட்விஸ்ட் வைத்திருந்தது.

அதற்கு ரசிகர்கள் ஒவ்வொரு பெயரை சொன்ன நிலையில் தற்போது அவருடைய கதாபாத்திரர் பெயர் தேவா என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டர் தான் இப்போது வைரலாகி வருகிறது. அது மட்டும் இன்றி அந்த போஸ்டரில் தலைவர் கையில் ஒரு பேட்ச் இருக்கிறது.

அதில் 1421 என்ற எண்கள் உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அதன் கூட்டுத்தொகை எட்டு என குறிப்பிட்டு பாட்ஷா படத்துடன் அதை கனெக்ட் செய்துள்ளனர். அதாவது 8க்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா என அந்த படத்தில் பாட்டு வரும். அதை போஸ்டரோடு பொருத்திப் பார்த்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அது மட்டும் இன்றி தளபதி படத்தில் ரஜினி தன் நண்பன் தேவாவை உயிராக நினைத்து கொண்டாடுவார். அந்தப் பெயர் இவருடைய கதாபாத்திர பெயராக இருப்பதையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். இப்படியாக வெளிவந்துள்ள இந்த போஸ்டர் சோசியல் மீடியாவை அதகளம் செய்து வருகிறது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content