இந்தியா

தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்: அமைச்சர் ரகுபதி

” தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்” என புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது,

”தமிழகத்தில் தேர்தல் களம் பிஜேபி வெர்சஸ் திமுக அல்ல.

பாஜக தமிழகத்தில் இன்னும் வளரவே இல்லை வளர்ந்தது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். பண பலத்தை வைத்துக்கொண்டு கட்சி வளர்வது போன்ற தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வைக்கின்றனர். திமுகவை எந்த கூட்டணியும் தொட முடியாது. தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும்.

எடப்பாடி ஆட்சியில் இருக்கும் போது எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை தற்போது நல்ல திட்டங்கள் செயல்படுத்தி வருவதால் அவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஏதேதோ உளறி வருகிறார்

ஸ்டெர்லைட் ஆலை குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து எங்களுடைய சட்டத்துறை நிபுணர்களுடன் கலந்து பேசி முதலமைச்சரிடம் கலந்து பேசி மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்

See also  நாட்டு பசு மாடுகளை ராஜமாதாவாக அறிவித்த மகாராஷ்டிரா அரசு

திமுக தேர்தல் அறிக்கை தான் தேர்தலில் கதாநாயகனாக இருக்கும்

அதை இப்போது சொல்வது தவறு அது சஸ்பென்ஸ்

மேகதாது அணையை தொடர்பாக தமிழக அரசு ஒப்புதல் வழங்குவதில்லை இது தொடர்பாக நீர்வளத் துறை அமைச்சர் குழுவுடன் பேசி வருகிறார்” என்றார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content