09 பேரை சுட்டுக் கொன்ற பிலிப்பைன்ஸ் துருப்பினர்!
பிலிப்பைன்ஸ் துருப்புக்கள் முஸ்லிம் போராளிகள் என சந்தேகிக்கப்படும் 09 பேரை கொன்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் கடந்த மாதம் இடம்பெற்ற தாக்குதலில் கிறிஸ்தவ வழிபாட்டாளர்களைக் கொன்ற குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழன் முதல் வெள்ளி வரை நடந்த துப்பாக்கிச் சூடுகளில் சுமார் 15 தீவிரவாதிகளுடன் இராணுவப் படைகள் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் 09 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
“உள்ளூர் பயங்கரவாத குழுக்களால் ஏற்படும் அச்சுறுத்தலை ஒழிப்பதில் நாங்கள் கூட்டாக பணியாற்றுவதால், சமூகம் விழிப்புடன் இருக்குமாறும், ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும் இராணுவம் கேட்டுக்கொண்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)