இலங்கை

இலங்கை தொடர்பில் ஜப்பான் விடுத்துள்ள கோரிக்கை

கடந்த ஆண்டு இறுதியில் கொள்கையளவில் உடன்பாடு எட்டப்பட்டதன் பின்னர், கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கைக்கும் கடன் வழங்கும் நாடுகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் முடிவடைய வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜப்பான் மீண்டும் தெரிவித்தது

கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கைக்கும் கடன்வழங்கிய நாடுகளிற்கும் இடையில் விரைவில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட வேண்டியதன் அவசியத்தை ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.

உத்தியோகபூர்வ கடனாளர் குழுவிற்கு வெளியே உள்ள கடன்வழங்குநர்களுடனான ஒப்பந்தங்களுடன் வெளிப்படை தன்மை மற்றும் ஒப்பீட்டுத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தையும் ஜப்பான் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு கடன்வழங்கிய 15 நாடுகள் குழுவிற்கு ஜப்பான் இந்தியா பிரான்சுடன் தலைமை தாங்குவது குறிப்பிடத்தக்கது.

1948 ன் பின்னர் மிகமோசமான நிதிநெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை மிகவும் அதிகரித்த பணவீக்கம் நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி போன்றன காரணமாக இலங்கையின் பொருளாதாராம் பெரும்வீழ்ச்சியை எதிர்கொண்டது.

அத்துடன் 2022இல் வெளிநாட்டுகடன்களை திருப்பி செலுத்த முடியாமல் வங்குரோத்து நிலையை அடைந்தது.

கடந்த மாதம் நவம்பரில் இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள்கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக அறிவித்தன.

இலங்கைக்கு அதிகளவு கடன்களை வழங்கிய சீனா இலங்கையுடன் இணக்கப்பாட்டை எட்டியுள்ளது எனினும் கடன்வழங்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ குழுவில் இடம்பெறவில்லை.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்