அதிகரிக்கும் பதற்றம் : தைவானுக்கு ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
தைவானுக்கு மேலும் ஆயுதங்களை விநியோகம் செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்படி 619 மில்லியன் மதிப்புள்ள எஃப்-16 போர் விமானங்களும், வெடிமருந்துகள், ஏஜிஎம்-88 கதிர்வீச்சி எதிர்ப்பு ஏவுகணைகள், ஆகியவை உள்ளடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் இருக்கும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தைவான் எல்லை பகுதியில் சீனா போர் பயிற்சிகளை மேற்கொண்டும், போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை நிலைநிறுத்தியும் அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தைவான் எல்லைக்குள் நேற்று சீனாவின் 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர் கப்பல்கள் நுழைந்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 1 visits today)