செய்தி பொழுதுபோக்கு

தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். ‘தளபதி 68’ என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.

கல்பாத்தி எஸ். அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல், ‘தளபதி 68’ படத்திற்கு ‘கோட்’ (Goat) என படக்குழு தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘தளபதி 68’ திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் வெங்கட் பிரபு ‘தளபதி 68’ படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு டைட்டில் தொடர்பான அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!