பாகிஸ்தானில் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழப்பு!
வடமேற்கு பாகிஸ்தானில் தற்கொலைப்படையினர் நடத்தியதாகக் கூறப்படும் தாக்குதலில் ஏறக்குறைய 23 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 28 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதல் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள காவல் துறையில் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்களில் பலர் சிவிலியன் உடையில் இருந்ததாகவும், அவர்கள் இராணுவத்தினரா என்பதை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.
நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான தெஹ்ரீக்-இ-ஜிஹாத் அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
(Visited 6 times, 1 visits today)