இலங்கையில் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நிலவும் அதிக மழையுடனான வானிலையுடன் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம், பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி, பதுளை மாவட்டத்தின் எல்ல மற்றும் ஹல்துமுல்ல பகுதிகளுக்கு முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, உடபலாத்த மற்றும் மெததும்பர ஆகிய பகுதிகளுக்கும் முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குருநாகல் மாவட்டத்தின் மாவத்கம மற்றும் பொல்கஹவெல, மாத்தளை மாவட்டத்தின் உக்குவெல அம்பன்கங்க கோரலே மற்றும் லக்கல பல்லேகம ஆகிய பகுதிகளுக்கும் முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நுவரெலியா மாவட்டத்தில் ஹகுரன்கெத்த மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் கலவானை மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேசங்களுக்கு முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது