இலங்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழாவை முன்னிட்டு நடைபவனி நிகழ்வு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகு ஆரம்பிக்கப்பட்டு 25 ஆண்டுகளை நிறைவு செய்வதனை முன்னிட்டு அதன் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களில் ஒரு நிகழ்வாக சுகநல மேம்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நடை பவனி நேற்று (03.12) நடைபெற்றது.

இணைந்த சுகநல விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதி  தெய்வி தபோதரன், விளையாட்டு விஞ்ஞான அலகின் தலைவர் கலாநிதி சி. சபாஆனந்த் மற்றும் விரிவுரையாளர்கள் கூட்டாகக் கொடியசைத்து ஆரம்பித்து வைத்த இந்த நடை பவனி பிறவுண் வீதி, இராமநாதன் வீதி, கே.கே.எஸ் வீதி, வைத்தியசாலை வீதி, பலாலி வீதி ஊடாகச் சென்று பல்கலைக்கழகத்தின் பிரதான வளாக முன்றலை அடைந்தது. அங்கிருந்து நகர்ந்த நடை பவனி பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.

இந்த நிகழ்வில் விளையாட்டு விஞ்ஞான அலகின் பழைய மாணவர்கள், விரிவுரையாளர்கள், போதனாசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்