உபாதைக்குள்ளான மேலும் ஒரு இலங்கை கிரிக்கெட் வீரர்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார உபாதை காரணமாக உலகக் கிண்ண தொடரில் எதிர்வரும் போட்டிகளில் விளையாடமாட்டார் என கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லஹிரு குமாரவுக்குப் பதிலாக துஷ்மந்த சமிர அணியில் இணையும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, நாளை (30) நடைபெறவுள்ள இலங்கை – ஆப்கானிஸ்தான் போட்டியில் குசல் ஜனித் பெரேராவிற்கு பதிலாக திமுத் கருணாரத்ன விளையாடுவார் என கிரிக்கெட் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
(Visited 11 times, 1 visits today)