ஹமாஸ் தாக்குதலில் மாயமான பிரித்தானிய பெண் சடலமாக மீட்பு
இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலில் தாயார் மற்றும் சகோதரியை இழந்த இளம்பெண் ஒருவர் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
16 வயதான Noiya Sharabi மற்றும் அவரது 13 வயது சகோதரி Yahel ஆகியோர் அக்டோபர் 7ம் திகதி முன்னெடுக்கப்பட்ட கொடூர தாக்குதலின் போது மாயமாகினர்.
ஆனால் இவர்களது 48 வயது தாயார் Lianne சடலமாக மீட்கப்பட்டார். தற்போது Noiya-வின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் உறுதி செய்துள்ளனர்.
ஆனால் இவர்களின் தந்தை 51 வயதான ஏலி தொடர்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை என்றே கூறப்படுகிறது.
அக்டோபர் 7ல் ஹமாஸ் படைகளால் கொல்லப்பட்ட 10வது பிரித்தானியர் Noiya என கூறுகின்றனர்.
(Visited 3 times, 1 visits today)