தமிழ்நாடு

அதிமுக தலைவர்கள் டெல்லி வந்ததை பிறர்சொல்லியே கேள்விப்பட்டேன் – வானதி சீனிவாசன்

டெல்லிக்கு வந்து அதிமுக மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதை பிறர் சொல்லியே கேள்விப்பட்டதாக பாரதியார் ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் தனக்கு சில மீடியாக்கள் அழைத்து கேட்டதாகவும் தான் பேச்சுவார்த்தையில் உடனிருந்ததாக தவறான செய்தி வெளியிட்டிருக்கின்றனர் என்றும் கூறினார். மேலும் நேற்று மாலை முழுவதும் கட்சி பணிகளில் இருந்ததாகவும், தொலைக்காட்சி செய்தியை பார்த்து தான் அதிமுக தலைவர்கள் டெல்லி வந்து இருப்பது தெரியவந்ததாகவும் கூறினார்.

அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதும் தெரியாது என கூறிய அவர் நான் பேச்சுவார்த்தையின் போது உடன் இருந்ததாக சொல்வது முற்றிலும் தவறான கருத்து என்றார்.
மகளிர் அணி தலைவராக பிரதமரின் பாராட்டு விழாவை முன்னின்று நடத்துவது தொடர்பாகவே டெல்லி சென்றதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

வானதி சீனிவாசனை தொடர்ந்து டெல்லியில் இருந்து கோவை விமான நிலையம் வருகை தந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார் .

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

தமிழ்நாடு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா  தொற்று முன்னேற்பாடு சிகிச்சை பணிகள்
தமிழ்நாடு

பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தராததை கண்டித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு. மாணவர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படும் ஆதிதிராவிடர்