பொழுதுபோக்கு

‘லியோ’ சிறப்புக் காட்சியை பார்த்த உடன் விஜய் என்ன செய்தார் தெரியுமா?

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் லியோ படம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், விஜய் இப்படத்தை தனி ஸ்கீரினில் பார்த்ததாக கூறப்படுகிறது. கிளைமாக்ஸ் உட்பட இதுவரை எடிட் செய்யப்பட்ட ‘லியோ’ சிறப்புக் காட்சியை விஜய் படக்குழுவினருடன் பார்த்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் லியோ படம் தன்னை வெகுவாக ஈர்த்ததாகவும், முழு திருப்தி, மகிழ்ச்சி அடைந்ததாகவும் விஜய் படக்குழுவினரிடம் கூறினாராம். படத்தின் ஃபைனல் வெர்ஷனை பார்த்துவிட்டு லோகேஷை கட்டுப்பிடித்து பாராட்டியதாகவும், படம் பிளாக்பஸ்டர் ஹிட் என நம்பிக்கையுடன் கூறியதாகவும் கூறப்படுகிறது.

படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இறுதிப் பிரதி இன்னும் தயாராகவில்லை. இறுதிப் பிரதி தயாரானதும், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் விஜய் மீண்டும் படத்தைப் பார்க்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, திரைப்பட தயாரிப்பாளர்களும் விஜய்யுடன் படத்தைப் பார்த்ததாகவும், படத்தின் வெளியீட்டில் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தனர். மேலும் இப்படம் ரசிகர்களை ஏமாற்றாது என தயாரிப்பாளர் லலித் குமார் தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content