ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடை – இலங்கை வெளியிட்ட அறிவிப்பு
ரஷ்யாவுக்கு இலங்கை நட்பு நாடாகவே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனித்த லியனகே இதனை தெரிவித்துள்ளார்.
இக்கட்டான காலங்களில் ரஷ்யா இலங்கைக்கு எவ்வாறு உதவியது என்பது நன்றாக ஞாபகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மொஸ்கோவில் இடம்பெற்ற ரஷ்ய – இலங்கை வர்த்தக தரப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பில் வைத்து இலங்கை தூதுவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிரான பேச்சுக்களையும் பொருளாதார தடைகளையும் இலங்கை ஆதரிக்காது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பை அடுத்து ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை மேற்கத்திய நாடுகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 5 times, 1 visits today)