ஈஸ்டர் தாக்குதல் : நான்கு வருடங்களாக பல இன்னல்களை அனுபவித்தேன் – மைத்திரி!
ஈஸ்டர் தாக்குதல் குறித்து கடந்த நான்கு வருடங்களாக தன்மீது பல்வேறு குற்றச்சாடுகள் சுமத்தப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சனல்-04 ஊடகம் வெளியிட்டுள்ள காணொலி குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர் மேற்படி கூறியுள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், சனல் 4 ஊடகம் ஏனைய உண்மைகளையும் வெளிப்படுத்தியுள்ளதால் இது தொடர்பில் சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதி வந்துள்ளார். எனவே, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பரிந்துரைப்படி நாட்டில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குரல் எழுப்பி வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
(Visited 8 times, 1 visits today)