இலங்கை செய்தி

இம்மாதம் 15ஆம் திகதி முதல் புதிய ஊழல் தடுப்புச் சட்டம்

புதிய ஊழல் ஒழிப்பு சட்டம் இம்மாதம் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி எதிர்வரும் காலங்களில் வெளியிடப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

புதிய ஊழல் ஒழிப்புச் சட்டம் தொடர்பில் மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் இன்று (07) நீதியமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே நீதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு பேசிய அமைச்சர், தற்போதுள்ள இலஞ்ச ஒழிப்பு சட்டம் பொதுத்துறை மற்றும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், புதிய சட்டத்தின் மூலம் தனியார் துறையிலும் ஊழல் விசாரணை நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போதுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தவறான தீர்மானத்தை வழங்கியிருந்தாலோ அல்லது பல்வேறு காரணங்களுக்காக வழக்குகளை வாபஸ் பெற்றிருந்தாலோ அதனை விசாரிக்கும் முழு அதிகாரம் புதிய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு உண்டு எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

(Visited 8 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை