இலங்கை செய்தி

அனுமதி வழங்கிய போதிலும் வாகனங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல்

பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், தேவையான கடனுதவிகளை வழங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்து, அந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தலையிட்டு தீர்வு காண்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலில், தற்போதும் அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இந்த நாட்டில் வழங்கப்படும் சர்வதேச கடன் கடிதங்கள் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொதுப் போக்குவரத்திற்குத் தேவையான பேருந்துகள் உட்பட பல வகை வாகனங்களின் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், இதன் காரணமாக அவற்றை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

(Visited 6 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை