வட அமெரிக்கா

மெக்சிகோவில் 300 சடலங்களை அமிலத்தில் கரைத்த சமையல்காரர்!

மெக்சிகோ நாட்டில் சினாலோவா போதை மருந்து கடத்தல் குழுவினரை சேர்ந்த சமையல்காரர் என அறியப்படும் ஒருவர் 300 சடலங்களை அமிலத்தில் கரைத்த பகீர் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த சினாலோவா குழுவானது உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் அமைப்பு என அறியப்படுகிறது. கடந்த 1980களில் இருந்தே மெக்சிகோ நாட்டின் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிலும் வைத்துக்கொண்டுள்ளது.இந்த நிலையிலேயே பொலிஸார் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கை ஒன்றின் மூலமாக சமையல்காரர் என அறியப்படும் Santiago Meza Lopez என்பவர் சிக்கினார். இவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் மொத்த அதிகாரிகளையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

சினாலோவா குழு கடத்தி கொலை செய்யும் பெரும்பாலான சடலங்களை இவர் அமிலத்தில் கரைத்து அடையாளம் தெரியாமல் செய்துள்ளார் என தெரிவித்துள்ளார். 1996ல் பண்ணை ஒன்றில் பணியாற்றியபோது சடலங்களை அமிலத்தில் கரைக்கும் செயலை முன்னெடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.பெரிய பீப்பாய்க்குள் தண்ணீர் மற்றும் அமிலத்தை கலந்து உடல் பாகங்களை நிரப்பி கரைத்துள்ளனர். மட்டுமின்றி, சினாலோவா குழுவினரில் சிலருக்கு தாம் பயிற்சியும் அளித்துள்ளதாக antiago Meza Lopez தெரிவித்துள்ளார்.

All that's left are the teeth… the chef who dissolved 300 corpses in acid

இவர் கைதான பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல பொலிஸாரை அணுகி, தங்களின் உறவினர்களை அடையாளம் காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தீவிர சோதனையில், பண்ணை ஒன்றில் இருந்து 200 கிலோ அளவுக்கு மனித உடல் பாகங்கள் மீட்கப்பட்டது.அந்த உடல் பாகங்கள் 650 நபர்களின் மிச்சமாக இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு அச்சம் தெரிவித்துள்ளனர். antiago Meza Lopez தெரிவிக்கையில், 300 சடலங்கள் வரையில் தாம் அமிலத்தில் கரைத்திருக்கலாம் என விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பொலிசார் தெரிவிக்கையில், தொடர்புடைய பண்ணையில் சடலங்களை தேடுகையில் தங்களுக்கு மனிதர்களின் பற்கள் மட்டுமே கண்டெடுக்க முடிந்தது எனவும், அவை அமிலத்தில் கரைந்திருக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.சினாலோவா குழு நாட்டின் பல பகுதிகளில் படுகொலை செய்யும் சடலங்களை பண்ணை ஒன்றில் அனுப்பி வைப்பதாகவும், அங்கே பெரிய பீப்பாய்களில் அமிலத்தை நிரப்பி உடல்களை கரைத்துள்ளதாக கூறுகின்றனர்.மட்டுமின்றி கைதான antiago Meza Lopez-ன் வீடு மொத்தம் பெரிய பீப்பாய்களை சேகரித்து வைத்திருந்ததும் பொலிசாரால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்