கடன் மற்றும் கடன் மறுசீரமைப்பு குறித்த நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு!
இலங்கையின் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் 4, 979 பில்லியன் ரூபாவிலிருந்து 13,979 பில்லியன் ரூபாய் வரை கடன் பெறுவதற்கான வரம்பை அதிகரிக்க பாராளுமன்ற அரச நிதிக் குழு அனுமதி வழங்கியதாக அரச நிதிக் குழுவின் பதில் தலைவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி குழுவின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
இதன்படி 9,000 பில்லியன் ரூபா கடன் வரம்பானது கடன் மறுசீரமைப்புச் செயற்பாட்டிற்கு மாத்திரம் பயன்படுத்தப்படும் என்றும் புதிதாக கடன் வாங்கப்பட மாட்டாது என்றும் உறுதியளித்து நிதி அமைச்சினால் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டதாக பதில் தலைவர் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
(Visited 10 times, 1 visits today)