இலங்கை

Online மூலம் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த மாதத்தில் 29,578 பேர் இணையவழியில் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இதில் ஒரு நாள் சேவைக்கு 5294 பேரும், பொது சேவைக்கு 24,285 பேரும் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பிராந்திய செயலகங்கள் இணைய முறையின் மூலம் வழங்கும் திட்டம் ஜூன் 15, 2023 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

அன்றைய தினம் முதல் 30 நாட்களுக்குள் 29,579 விண்ணப்பங்கள் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பதாரரின் பெயரைப் பதிவு செய்வதற்கு, நியமிக்கப்பட்டுள்ள 51 பிராந்திய செயலக அலுவலகங்களில் ஏதேனும் ஒன்றைப் பார்வையிடுவது அவசியம் என சுட்டிக்காட்டிய அமைச்சர், உரிய கொடுப்பனவுகளை இணையம் மூலமாகவோ அல்லது இலங்கை வங்கியின் கிளைக்கு சென்று செலுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்