யாழில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு!
யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
2022 ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 06 முறைப்பாடுகளும், சிறுவர்களுக்கு எதிராக 53 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 2023 ஜனவரி மாதம் முதல் மே மாத இறுதிவரை பெண்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 04 முறைப்பாடுகளும், சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 53 முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளன.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுடன் தொடர்புடையோர் உரிய முறையில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டுள்ளதோடு பலர் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.