மேலும் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

லங்கா சதொச நிறுவனம் மேலும் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை இன்று (15) முதல் குறைத்துள்ளது.
இதன்படி ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு 195 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பின் விலை ரூ.4 குறைந்து ரூ.295க்கு விற்கப்படுகிறது.
ஒரு கிலோகிராம் கடலை பருப்பின் விலை 13 ரூபாவினால் 275 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.
(Visited 13 times, 1 visits today)