Ukவில் எலக்ட்ரோகீமோதெரபி சிகிச்சையை பெற்ற முதல் பெண்மணி!
பிரித்தானியாவில் கல்லீரல் கட்டியை குணப்படுத்துவதற்கான அறுவை சிகிச்சையில் முதல் முறையாக ரோபோ வழிகாட்டும் எலக்ட்ரோகீமோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு யார்க்ஷயரில் உள்ள ஹாரோகேட்டைச் சேர்ந்த 92 வயதான பிரெண்டா ஐவ்சன் (Brenda Iveson) என்ற பெண்மணிக்கே இந்த சிகிச்சை முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது.
கட்டியின் இருப்பிடம் மற்றும் அவரது உடல் பலவீனம் காரணமாக ஆரம்பத்தில் வழங்கப்படும் அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி உள்ளிட்ட வழக்கமான சிகிச்சைகள் அவருக்கு பலனளிக்காமல்போனதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்தே அவருக்கு எலக்ட்ரோகீமோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறை அவருக்கு 80 சதவீதம் பலனளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அவர் மிகவும் நலமாக உணர்வதாகவும், முன்பு எந்த வழிகளும் இல்லாத நிலையில் இந்த சிகிச்சை நம்பிக்கை அளித்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.





