செய்தி

ஹார்முஸ் நீரிணையில் கப்பல்மீது தாக்குதல்: ஈரான் தூதுவருக்கு தென்கொரியா அழைப்பாணை!

ஹார்முஸ் நீரிணையில் HMM Namu என்ற சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானிய தயாரிப்பு ஏவுகணை பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தென்கொரியா தெரிவித்துள்ளது.

தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சு நடத்திய தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் இந்தத் தாக்குதலுக்கும் ஈரானுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக, ஏவுகணையின் சிதைந்த பாகங்கள் மற்றும் அதன் வெடிபொருட்களின் நிறத்தை வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளிக்க வருமாறு ஈரானியத் தூதருக்கு தென்கொரிய அரசு சம்மன் அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

சர்வதேச கடல் பகுதியில் நடைபெற்ற இந்த வன்முறைச் சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரிய நிறுவனத்தால் இயக்கப்படும் இந்தக் கப்பல் மீதான தாக்குதலை தென்கொரியா அரசு, மிகவும் தீவிரமான விடயமாகக் கருதுகின்றது.

மே 4 ஆம் திகதியே மேற்படி கப்பல்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!