இந்தியா செய்தி

பிரதமர் மோடிக்கு சுவீடனில் உயரிய விருது!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சுவீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்’ விருந்து வழங்கப்பட்டுள்ளது.

சுவீடன் இளவரசி விக்டோரியாவால் குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். பின்னர் அங்கிருந்து நெதர்லாந்து பயணமானார்.

இந்நிலையில் மூன்றாவது நாடாக சுவீடனுக்கு நேற்று சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் விமான நிலையத்துக்கு நேரில் சென்று வரவேற்றார்.

பிரதமர் மோடிக்கு அரசு தரப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது. சுவீடன் வாழ் இந்திய மக்கள், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதேவேளை, இரு தரப்புக்கு இடையே சிறப்பான உறவுக்காக பிரதமர் மோடி அளித்த பங்களிப்பு மற்றும் அவரது தலைமை பண்பினை அங்கீகரிக்கும் வகையிலேயே அவருக்கு மேற்படி உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் பிரதமர் மோடிக்கு கிடைத்த 31-வது கௌரவ விருதாக இது அமைந்துள்ளது.

சுவீடன் பயணத்தின் பின்னர் பிரதமர் மோடி, நோர்வே செல்கின்றார். அங்கிருந்து இத்தாலி செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!