இத்தாலியில் ஓட்டுநர் ஒருவரின் மூர்க்கமான செயல் – 08 பேர் காயம்!
வட இத்தாலிய நகரமான மொடெனா (Modena) நகரில் இன்று பாதசாரிகள் மீது கார் ஒன்று மோதியதில் 08 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் முப்பது வயது நிரம்பிய ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த ஓட்டுநர் தன்னை தடுக்க வந்த நபர் ஒருவரை கத்தியால் குத்த முற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




