லண்டனில் பிரமாண்ட போராட்டம் – 4000 பொலிஸார் குவிப்பு!
லண்டனில் நடைபெறவுள்ள டாமி ராபின்சனின் ‘யுனைட் தி கிங்டம்’ பேரணியில், ஏராளமானோர் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.
ராபின்சனின் பேரணியில் சுமார் 50,000 பேரும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவான தனிப் பேரணியில் 30,000 பேரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பெருநகர காவல்துறை ஒரு பெரிய காவல் நடவடிக்கைக்குத் தயாராகி வருகிறது.
காவல் பணியில் சுமார் 4000 வீரர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான செலவு சுமார் £4.5 மில்லியன் செலவாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை வெறுப்பு பேச்சுக்கள் அல்லது உரைகளை மேற்கொள்ளும்போது கடுமையான நடவடிக்கை எடுப்போம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.





