ஐரோப்பா

பிரித்தானியாவில் தலைமைப் போட்டி : கூட்டாக கையெழுத்திட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

தற்போதைய அரசியல் சூழலில், “இது  தலைமைப் போட்டிக்கான நேரமல்ல” என்று வலியுறுத்தி, சர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டாம் எனக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆளும் தரப்பில் அங்கம் வகித்த நான்கு அமைச்சர்கள் பதவிவிலகியுள்ள நிலையில், 80க்கும் மேற்பட்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன.

இந்த அழுத்தங்கள் இருந்தபோதிலும், சர் கெய்ர் தனது அமைச்சரவையிடம் “நான் பதவி விலக மாட்டேன்” என்று சவாலாகக் கூறியுள்ளார்.

மேலும், தனது பிரதமர் பதவிக்காலத்தின் மிகப்பெரிய நெருக்கடியாகக் கருதப்படும் இந்த நேரத்தில் தனக்கு ஆதரவளிக்குமாறும் அவர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த அரசியல் பிரச்சினைகளுக்கு இடையே தலைமைப் பதவிக்கு வர வாய்ப்புள்ள போட்டியாளராகப் பரவலாகக் கருதப்படும் சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங், சர் கெய்ர் ஸ்டார்மரைச் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!