உலகம் செய்தி

லெபான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 08 பேர் பலி

லெபானின் தெற்கு பகுதிகளில் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களில் இரண்டு குழந்தைகள் உட்பட சுமார் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

தெற்கு லெபனானின் முக்கிய கடலோர பாதையான சிடோன் (Sidon) – தெற்கு நெடுஞ்சாலையை இலக்குவைத்து தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்கள் பர்ஜா (Barja),ஜியே(Jiyeh) மற்றும் சாடியாத் (Saadiyat) பகுதிகளில் இடம்பெற்றதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இஸ்ரேல் மற்றும் லெபனானை தளமாகக் கொண்ட ஆயுதக் குழுக்களுக்கிடையிலான மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எல்லைப் பகுதிகளில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!