பிரித்தானிய அரசியலில் புதிய பரபரப்பு – சுகாதாரச் செயலாளர் ராஜினாமா?
பிரித்தானிய அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், சுகாதாரச் செயலாளர் Wes Streeting தனது பதவியை ராஜினாமா செய்யத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் அவர் தொழிலாளர் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட எதிர்பார்ப்பதாகவுதம் கூறப்படுகிறது.
‘தி டைம்ஸ்’ வெளியிட்ட தகவலின்படி, Keir Starmer உடன் நடந்த சந்திப்பில், தலைமைப் பதவிக்குப் போட்டியிடும் தனது முடிவை ஸ்ட்ரீட்டிங் தெரிவித்ததாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளன.
நாளைய தினம் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவரது வேட்புமனுவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துகளை பெறுவதற்கான ஏற்பாடுகளும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் செய்தி குறித்து ஸ்ட்ரீட்டிங்கின் தரப்பு நேரடியாக மறுப்பு தெரிவிக்கவில்லை. அவரது செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், “வெஸ் தற்போது சுகாதாரச் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
காத்திருப்போர் பட்டியல் குறைவதும், தேசிய சுகாதார சேவை (NHS) மீள முன்னேற்றம் காண்பதும் போன்ற சாதனைகளில் அவர் பெருமை கொள்கிறார்,” என்று கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரதமருடன் நடைபெற்ற சந்திப்புக்குப் பிறகு, மன்னரின் உரையிலிருந்து கவனம் சிதறும் வகையிலான எந்தக் கருத்தையும் அவர் வெளியிடமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




