விஜய்யின் ஜோதிடருக்கு வழங்கப்பட்ட அரச பதவி ரத்து!
ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் , தமிழக முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
“ ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை முதல்வரின் சிறப்புப் பணி (அரசியல்) அதிகாரியாக நியமிப்பது தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் விஜய்யின் ஜோதிடர் ராதன் பண்டிட் வெற்றிவேல் முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நேற்று நியமனம் செய்யப்பட்டார்.
இந்நியமனத்துக்கு திமுக, காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
ஜோதிடர் ராதன் பண்டிட் நியமனத்துக்கு இவ்வாறு எதிர்ப்பு வலுத்த நிலையில், தவெக அரசு அந்த உத்தரவை ரத்து செய்துள்ளது.




