ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலிய பொருளாதாரம் குறித்து எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய கடுமையான தாக்கங்கள் தொடர்பில் வரவு- செலவுத் திட்டத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் பாதுகாப்புக்காக பில்லியன் கணக்கான டாலர்கள் முதலீடு செய்யப்பட்டிருந்தாலும், கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 200 அமெரிக்க டாலர்களை எட்டினால் பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

தற்போதைய பதற்றமான சூழலால் எரிபொருள் விநியோகம் தடைபட்டு, அதன் விளைவாக ஆஸ்திரேலியக் குடும்பங்களின் வாழ்க்கைச் செலவு உயரும் அபாயத்தை திறைசேரி தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆஸ்திரேலிய பொருளாதாரம் மந்தநிலையைத் தவிர்த்தாலும், உற்பத்தி மற்றும் வளர்ச்சியில் கடுமையான தேக்கநிலையை சந்திக்க நேரிடும் என்று நிதியமைச்சர் ஜிம் சால்மர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இக்கட்டான உலகளாவிய நெருக்கடியை எதிர்கொள்ள ஆஸ்திரேலியா தனது பொருளாதார வலிமையைப் பயன்படுத்தி மீண்டெழத் தயாராகி வருகிறது.

“ இந்த போர் எப்போது தொடங்கியது என்பதை நாம் தீர்மானிக்கவில்லை, அது எப்போது முடிவுக்கு வரும் என்பதும் நம் கட்டுப்பாட்டில் இல்லை.

எனினும், நாம் அதற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறோம் என்பது நம் கையில் தான் உள்ளது,” என்று பொருளாளர் ஜிம் சாமர்ஸ் தெரிவித்தார்.

இந்த நெருக்கடியிலிருந்து ஆஸ்திரேலியா முன்னையை விட வலிமையாகவும், மீள்திறன் கொண்ட நாடாகவும் உருவெடுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!