உக்ரைன் பொருட்களுக்கு வரி விலக்கு நீட்டிப்பு: ஆஸ்திரேலிய பாதீட்டில் முக்கிய முடிவு!
ஆஸ்திரேலியாவின் 2026 – 27 இற்கான வரவு- செலவுத் திட்டத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய உறவுகளை வலுப்படுத்துவதற்கு உரிய ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உலகளாவிய நிச்சயமற்ற நிலைகளுக்கு மத்தியில், ஆஸ்திரேலியா தனது அண்டை பிராந்தியமான இந்தோ-பசிபிக் பகுதிக்கு முன்னுரிமை அளித்துள்ளது.
அதேபோல 2026 பெப்ரவரியில் கைச்சாத்திடப்பட்ட ‘இந்தோனேசியா-ஆஸ்திரேலியா பொது பாதுகாப்பு ஒப்பந்தத்தை” செயல்படுத்த 33.2 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
இந்தியாவுடனான விரிவான மூலோபாய கூட்டாண்மையின் அடுத்த கட்டத்திற்காக 25.3 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய வணிகங்களை இந்தியப் பொருளாதாரத்துடன் இணைக்கவும், இந்தியப் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தவும் இதது உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வெளிநாடுகளில் உள்ள ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தூதரக சேவைகளை மேம்படுத்தவும் 60.5 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைனின் இறையாண்மை மற்றும் பொருளாதாரத்திற்கு ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆதரவளித்துவருகின்றது.
உக்ரைன் பொருட்கள் ஆஸ்திரேலியாவிற்கு வரி இன்றி இறக்குமதி செய்யப்படுவது 2028 ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை செயல்படுத்த 87 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.





