அபார வெற்றியுடன் முதலிடத்துக்கு முன்னேறியது குஜராத்!
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 56-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது குஜராத் டைட்டன்ஸ் அணி.
இதன் மூலம் குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது.
அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது.
குஜராத் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களைப் பெற்றது.
169 ரன்கள் என்ற இலக்கை விரட்டியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 14.5 ஓவர்களில் 86 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அந்த அணி எடுத்த குறைந்தபட்ச ரன்களாக இது அமைந்தது. அதோடு குஜராத் அணிக்கு இது அதிக ரன் வித்தியாசத்தில் வென்ற ஆட்டமாக அமைந்தது.
அந்த அணி 82 ஓட்டங்களால் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஆட்ட நாயகன் விருதை ரபாடா வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது குஜராத் டைட்டன்ஸ்.
12 ஆட்டங்களில் 8 வெற்றி, 4 தோல்வி உடன் 16 புள்ளிகளை பெற்றுள்ளது அந்த அணி.





