தவெக ஆட்சிக்கு அதிமுகவும் ஆதரவு!
தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார்.
” நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக விஜய் வரவேண்டும் என்று மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். மேற்படி தீர்ப்பை அதிமுக தலைவணங்கி வரவேற்கிறது.
தேர்தலுக்குப் பிறகு கலந்தாலோசித்தபோது கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி சில முன்மொழிவுகளை எங்கள் முன்வைத்தார்.” எனவும் சிவி சண்முகம் கூறினார்.
அதிமுக இனி எந்த கூட்டணியிலும் இல்லை. தேர்தலுக்கு முன்பு இருந்த எந்த கூட்டணியிலும் இனி அதிமுக இருக்காது. இந்த கட்சி காப்பாற்றப்பட வேண்டும்.
புதிய கூட்டணி அமைக்கப்பட வேண்டும் என்று பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
அந்த தீர்மானத்தின் படி, தற்போது வெற்றி பெற்றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளிக்கலாம் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக சட்டமன்ற குழு தலைவராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தேர்வு செய்துள்ளோம்.
கொறடாவாக சி.விஜயபாஸ்கர், சட்டமன்ற குழு துணை தலைவராக ஹரி, செயலாளராக முன்னாள் அமைச்சர் காமராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் தற்காலிக சபாநாயகரிடம் கடிதம்
கொடுத்துள்ளோம்” என்று சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.




