உலகம் செய்தி

கொக்கைன் போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியாவின் முன்னாள் படை வீரருக்கு சிறை தண்டனை!

ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் பணியாற்றிய Jack Alex Cullen , கொக்கையின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தில் பணியாற்றியபோதே தன் சக படையினருக்கும், மற்றவர்களுக்கும் பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகித்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

காவல்துறை நடத்திய சோதனையில், அவர் சுமார் $80,000 மதிப்புள்ள போதைப்பொருட்களை வாங்க முயன்றதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தனது சொந்தப் போதைப்பொருள் பழக்கத்திற்குத் தேவையான பணத்திற்காகவே இந்தக் குற்றங்களைச் செய்ததாக அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

இருப்பினும், அவர் சாதாரண நுகர்வோருக்கு மட்டுமின்றி மொத்த விற்பனையாளர்களுக்கும் மருந்துகளை வழங்கியதால், நீதிமன்றம் அவருக்குக் கடுமையான தண்டனையை வழங்கியது.

இதன்படி, அவர் குறைந்தது ஓராண்டு காலம் கட்டாயமாகச் சிறையில் கழிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!