விஜய்க்கு புத்தகம் வழங்கிய சீமான்!
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் , நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை, சீமான் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார்.
சீமானுக்கு ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து சீமானும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு புத்தகம் கொடுத்து மரியாதை செய்தார்.
சீமானுடன் சிறிது நேரம் உரையாடிய பின்னர் அங்கிருந்து முதல்வர் ஜோசப் விஜய் புறப்பட்டார்.





