லண்டனில் யூத எதிர்ப்பு கண்டன பேரணி – அரசியல் தலைவர்கள், மத அமைப்புகளுக்கு அழைப்பு
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் யூத எதிர்ப்பை கண்டித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணியில் பங்கேற்குமாறு அரசியல் தலைவர்கள் மற்றும் பல மத அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய லண்டனில் இன்று இந்த பேரணி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“யூத எதிர்ப்பை ஒழிப்போம்” எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இந்த பேரணிக்கு 30 இற்கும் மேற்பட்ட யூத அமைப்புகள் ஆதரவு வழங்கியுள்ளன.
இந்த பேரணியில் பிரதமர் ஸ்டார்மர் கலந்துகொள்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும், கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் கெமி படேனொக் (kemi Badenoch) உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ரிஃபார்ம் யுகே கட்சித் தலைவர் நைஜல் ஃபராஜுக்கு (Nigel Farage) அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கானோர் இந்த அழைப்புக்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அண்மைய மாதங்களில் யூத சமூகங்களை இலக்குவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் கோல்டர்ஸ் கிரீனில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவங்களுக்குப் பதிலாக இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, முஸ்லிம், கிறிஸ்தவ, இந்து, சீக்கிய மற்றும் சொராஸ்ட்ரிய (zoroastria) மதத் தலைவர்களும் யூத மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தி கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.





