புதிய அரசுக்கு ஸ்டாலின் மீண்டும் வாழ்த்து
திமுக தலைவர் ஸ்டாலின் புதிய அரசுக்கு மீண்டும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மாநிலம் வளரும்.
இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவர் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்வார். இதனால், பெரும்பான்மைக்கு 11 இடங்கள் தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களுடன் முதலில் ஆதரவு தந்தது. பின்னர், சிபிஐ, சிபிஎம் தனது ஆதரவை அளித்தன. இதனையடுத்து தவெகவுக்கு மேலும் 2 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே தேவைப்பட்டது.
இந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்குப் பின்னர் இன்று விசிகவும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது. தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவைக் கொடுத்துள்ளது.




