ரஷ்யா, உக்ரைனுக்கிடையில் 3 நாள் போர் நிறுத்தம்!
ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையில் மூன்று நாள் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சியால் மூன்று நாள் தற்காலிக போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இரண்டாம் உலகப் போர் வெற்றியைக் கொண்டாடும் வெற்றி தினத்தை முன்னிட்டு, மே 9 முதல் 11 வரை இந்த தற்காலிக அமைதி ஒப்பந்தம் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தலைநகரில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பின் போது தாக்குதல் நடத்த மாட்டோம் என உக்ரைன் உறுதியளித்துள்ள நிலையில், இந்த இடைவேளை போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான தொடக்கமாக அமையலாம் என டிரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.





