உள்ளுராட்சி தேர்தல் – ஸ்டாமருக்கு பின்னடைவு!! வரலாறு படைத்த சீர்த்திருத்த Uk கட்சி!
பிரித்தானியாவில் உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
அந்தவகையில் பிரித்தானியாவின் சீர்த்திருத்த Uk கட்சி குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றுவருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர் கெய்ர் ஸ்டார்மரின் தொழிலாளர் கட்சி கணிசமான இழப்புகளைச் சந்தித்துள்ளது. ஆரம்ப அறிவிப்புகளில் 160-க்கும் மேற்பட்ட இடங்களை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சீர்த்திருத்த Uk கட்சி 210 இடங்களுக்கும் மேல் வெற்றிப்பெற்றுள்ளது.
செஷயரில் உள்ள ஹால்டனில், சீர்த்திருத்த Uk கட்சி 15 கவுன்சிலர்களைக் கைப்பற்றியது. அதே நேரத்தில், தொழிலாளர் கட்சி தான் பாதுகாத்து வந்த 17 இடங்களில் இரண்டை மட்டுமே தக்க வைத்துக் கொண்டது.
மேலும், ரிஃபார்ம் கட்சி சில வார்டுகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சீர்த்திருத்த Uk கட்சியின் நைஜல் ஃபாரேஜ் (Nigel Farage), வரலாற்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதேநேரம் பொதுத் தேர்தலில் தங்கள் கட்சி வெற்றி பெறும் பாதையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.





