சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேகநபர் கைது!
திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (07) பதிவாகியுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மொரவௌ 10ம் கட்டை பகுதியில் வசித்து வரும் 40 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





