ஜெர்மனியில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த கார் – இருவர் பலி!
ஜெர்மனியின் லீப்ஜிக் (Leipzig) நகரின் மையத்தில் மக்கள் கூட்டத்தின் மீது கார் புகுந்ததில் இருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி (Volkswagen SUV ) வாகனத்தை செலுத்திய ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் சம்பவ இடத்திலிருந்து சரிபார்க்கப்படாத அறிக்கைகள், புகைப்படங்கள் அல்லது காணொளிகளைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.




