தவெகவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ‘எக்ஸ்’ (X) சமூக தளத்தில் வெளியிட்ட பதிவில், கட்சித் தலைவர் விஜய்யை வாழ்த்தியுள்ளார்.
அந்த பதிவில் அவர் குறிப்பிடுகையில்,
“அன்புள்ள விஜய் அவர்களுக்கு, ஊழலற்ற அரசியல், சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை முன்னிறுத்தி தமிழ்நாட்டை முன்னணிக்குக் கொண்டு செல்லும் சிறந்த தலைவராக நீங்கள் உயர வளர வாழ்த்துகள்.
பிளவுகளை மறுக்கும் அரசியல் பண்பாட்டுடன், தமிழையும் தமிழரையும் கொண்டாடி, சென்னை நகரத்தை கலை மற்றும் செழிப்பு நிறைந்த நகரமாக மாற்றும் உங்கள் பயணம் வெற்றியடையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.





