விளையாட்டு

வேலை செய்துக்கொண்டே கிரிக்கெட் பார்க்கும் அரிய வாய்ப்பு – பிரித்தானியர்களுக்கான மகிழ்ச்சி செய்தி

பிரித்தானியாவில் பலரும் தற்போது வீட்டிலிருந்தே பணிபுரியும் நிலையில், சர்ரே கவுண்டி கிரிக்கெட் கிளப் (Surrey County Cricket Club) புதிய முயற்சியாக இரசிகர்களையும் பணிபுரிபவர்களையும் மைதானத்துக்கு ஈர்க்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தென் லண்டனில் அமைந்துள்ள 180 ஆண்டுகள் பழமையான கியா ஓவல் (The Kia Oval) மைதானத்தில், “Work From Oval” என்ற பெயரில் வேலை செய்யும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வலுவான Wi-Fi வசதி, மின்சார இணைப்பு மற்றும் ஆட்டத்தை தெளிவாகக் காணும் வசதியுடன் கூடிய மேசைகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வசதியை பயன்படுத்தும் ஹைபிரிட் பணியாளர்கள் தங்கள் பணியை செய்யும் அதேவேளை கிரிக்கெட்டை பார்வையிடும் வாய்ப்பையும் பெறுகின்றனர்.

போட்டி நடைபெறும் நாட்களில் நூற்றுக்கணக்கானோர் இந்த வசதியை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!