எனக்கு தலைவர் அவர் தான் – விஜயின் தந்தை பேட்டி!
தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.
“எவ்வளவோ எதிர்ப்புகளை, சோதனைகளை தாண்டி விஜய் வந்துள்ளார். ஒரு அப்பாவாக ரொம்ப சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கிறது.
இதைவிட என்ன வேணும்? நான் 125 இடங்களில் வெற்றி பெறுவார் என நினைத்தேன். விஜயை தங்களது குடும்பத்தில் ஒருவராக தமிழக மக்கள் பார்க்கின்றனர்.
எனக்கு தலைவர் அவர்தான். நான் தொண்டன்தான்” எனத் தெரிவித்துள்ளார்.





