உலகம் செய்தி

ஈரானின் சமாதானத் திட்டம் என்ன?

ஈரான் நாடு, அமெரிக்கா அரசிற்கு புதிய சமாதானத் திட்டம் ஒன்றை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திட்டம் பாகிஸ்தான் வழியாக அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சமாதானத் திட்டத்தில் மூன்று முக்கிய கட்டங்கள் உள்ளன. இது 30 நாட்களுக்குள் போர் நிறுத்தத்தை நிலையான அமைதியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதென Al Jazeera தெரிவித்துள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சமாக, மத்திய கிழக்கில் மீண்டும் போர் ஏற்படாமல் இருக்க அனைத்து தரப்பும், குறிப்பாக இஸ்ரேல் உட்பட,  தாக்குதல் செய்யமாட்டோம் என்று உறுதி அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, முக்கியமான ஹோர்முஸ் நீரிணை படிப்படியாக திறக்கப்பட வேண்டும் என்றும், அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், கடல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்ணிவெடிகளை அகற்றும் பொறுப்பை ஈரான் ஏற்கும் எனவும் அந்த திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!